தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் காணிக்கை முடி ரூ.59 லட்சத்துக்கு ஏலம்
ADDED :4898 days ago
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் காணிக்கை முடி ரூ.59 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் போனது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி ஒரு ஆண்டுக்கு சேகரித்து எடுத்து கொள்வதற்கு ஏலம் விடுவது வழக்கம். தற்போது 1422 ம் பசலிக்கு ( ஜூலை 2012 முதல் ஜூன் 2013 ) முடிய உள்ள காலத்திற்கு பக்தர்கள் மொட்டை போடுவதன் மூலம் கிடைக்கும் காணிக்கை முடியினை சேகரித்து எடுத்துக் கொள்வதற்கு கோயில் அலுவலகத்தில் அறநிலையத்துறை சிவகங்கை துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு கார்த்திக், பரமக்குடி சரக ஆய்வாளர் (பொறுப்பு) முருகானந்தம் முன்னிலையில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியாரால் டெண்டர் மற்றும் ஏலம் நடத்தப்பட்டது.மதுரையை சேர்ந்த நிறுவனம் ரூபாய் 59 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.