திருப்பரங்குன்றத்து கோயிலில் உண்டியல் வருமானம்
ADDED :4954 days ago
குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 19 லட்சத்து 59 ஆயிரம் உண்டியல் வருமானம் கிடைத்தது.கோயிலில் 25 நிரந்தர, 2 கிரிவல உண்டியல்கள் உள்ளன. கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் வில்வமூர்த்தி, கண்காணிப்பாளர் பாலலட்சுமி, ஆய்வர் உமா மகேஸ்வரி முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில், ரூ. 19 லட்சத்து 59 ஆயிரம் பணம், தங்கம் 302 கிராம் மற்றும் வெள்ளி வருமானமாக கிடைத்தது. கோயில் பணியாளர்கள், வேதபாடசாலை மாணவர்கள், பள்ளி மாணவிகள், அய்யப்ப சேவா சங்கத்தினர் பணியில் ஈடுபட்டனர்.