முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா
ADDED :1669 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வீடுகளில், வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.நேற்று கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற முளைப்பாரிகளை அரசூரணி நீரில் கொட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.