மொக்கணீஸ்வரர் கோவிலில் சர்வாலய தீபஜோதி திருவிழா சிவனடியார்கள் பரவசம்
ADDED :11 minutes ago
அவிநாசி: அவிநாசி, சேவூர் அருகே கூளேகவுண்டன்புதுார் மொக்கணீஸ்வரர் கோவிலில், சர்வாலய தீபஜோதி விழா விமரிசையாக நடந்தது.
குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட கூளேகவுண்டன்புதுாரில், மாணிக்கவாசகர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தீபத்திருவிழாவை முன்னிட்டு சர்வாலய தீபஜோதி விழா நடைபெற்றது. முன்னதாக ருத்ர பாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில், சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் பாராயணம் செய்தனர். சிவகண பூத வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தீப ஜோதி திருவிழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.