உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பத்தில் வித்தியாசமாக ஒரே இடத்தில் ஐந்து சொக்கப்பனைகள்

நெல்லிக்குப்பத்தில் வித்தியாசமாக ஒரே இடத்தில் ஐந்து சொக்கப்பனைகள்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பரணி நட்சத்திரத்தின் அன்று சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம். ஆனால் கீழ்ப்பட்டாம்பாக்கம் மழுவேந்திய விநாயகர் கோவிலில் பரணி தீபத்தின் மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கமாக வைத்துள்ளனர். கோவில் வளாகத்தில் மழுவேந்தி விநாயகர்.திரௌபதி அம்மன், கெங்கையம்மன், வைத்தியநாத சுவாமி,வள்ளலார் என 5 சுவாமிகளுக்கும் தனி தனி சன்னதிகள் உள்ளன. நேற்று மாலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் மழுவேந்திய விநாயகர் எழுந்தருளினார். அப்போது வித்தியாசமாக ஒரே சமயத்தில் 5 சொக்கபனைகள் ஏற்றப்பட்டது.இதை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !