உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் அம்மன் பிரகார உலா

செங்கழுநீர் அம்மன் பிரகார உலா

 அரியாங்குப்பம்: செங்கழுநீர் அம்மன் கோவிலில் அம்மன் பிரகார உலா நடந்தது. வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் திருவிழாவில், ஆடி மாதத்தின் 5வது வெள்ளிக் கிழமையன்றுதேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். தற்போது, கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தேரோட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், அம்மனுக்கு நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலுக்குள் பிரகார உலா நடந்தது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !