சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1588 days ago
புதுச்சேரி,- குரு சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. புதுச்சேரி கருவடிக்குப்பத்தில், பிரசித்திப் பெற்ற, குரு சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பகவானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் நேற்று மாலை சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, நந்தியம் பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை தேவ சேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.