சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1523 days ago
வடமதுரை: வடமதுரை மேற்கு ரத வீதி சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.கணபதிக்கு கனி, மூலிகை பூஜைகள், மகாசங்கல்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. கொரோனா தொற்று பிரச்னையால் ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் உற்சவர் புறப்பாடாகி கோயில் வளாகத்தை வலம் வந்தார். ஏற்பாட்டினை சித்தி முக்தி விநாயகர் சேவை அறக்கட்டளை தலைவர் கோதண்டபாணி, துணைத் தலைவர் பவுன்ராஜ், செயலாளர் குமார், துணை செயலாளர் வேல்மணி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் சங்கடஹர சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.