செய்த உதவியை சொல்லாதீர்
ADDED :1616 days ago
உதவி கேட்டு வருபவருக்கு நீங்கள் உதவ முடியாவிட்டாலும், அவர்கள் மீது கோபப்படாதீர்கள். ‘இப்போது வாய்ப்பு இல்லை. பிறகு உதவுகிறேன்’ என ஆறுதலாக சொல்லுங்கள்.
பணஉதவி செய்ய முடியாவிட்டாலும் வேறுவகையில் உதவி செய்யுங்கள். இப்படி செய்துவிட்டு அவர்களிடம், ‘‘என்னைப் பார்த்தாயா! எவ்வளவு பெரிய உதவியை செய்திருக்கிறேன். என்னைப் போல நல்லவர் வேறு யார் இருக்கிறார்கள்’’ என பெருமை பேசாதீர்கள். உதவி செய்தவர்களிடம் எனக்கே சாதகமாக இருக்க வேண்டும் என அவர்களை வற்புறுத்தாதீர்கள்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். அதேபோல் செய்த உதவியை சொல்லிக்காட்டாதீர்கள்.