கடமை அது கடமை!
ADDED :1616 days ago
விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி கொண்ட மரத்தின் கீழ் சோம்பேறி ஒருவர் உட்கார்ந்திருந்தார். இங்கேயே தண்ணீரும், உணவும் கிடைத்தால் நல்லதே என அவர் நினைத்த உடனேயே, அங்கு தண்ணீரும், மரத்திலிருந்து பழமும் கிடைத்தது. சாப்பிட்ட காரணமாக துாக்கம் வரவே கட்டில் தேவை என நினைத்தார். அங்கு கட்டிலும் வந்தது. துாக்கத்தில் திடீரென்று கண் விழித்தார்.
‘நினைச்சது எல்லாம் நடக்குதே, ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அது வந்து என்னை கொன்று விட்டால் என்ன செய்வது’ என பயந்தான். அதுவும் உண்மையானது. பிசாசு அவனை கொன்றது. சோம்பேறித்தனத்தால் வந்த விளைவு அது. இதற்கு தீர்வு; கடமையை ஒழுங்காக செய்.