நல்லவர் நட்பு
ADDED :1616 days ago
ஒரு ஊரில் பல இளைஞர்கள் குடிகாரர்களாக இருந்தனர். எவர் சொல்லியும் இந்த குடிபழக்கத்தை விடவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு முதியவர், குளத்தில் தான் அற்புதம் ஒன்றை நிகழ்த்தப்போவதாக சொன்னர். அனைவரும் அங்கு கூடினர்.
‘‘பெரிய கல்லைக்கூட என்னால் மிதக்க வைக்க முடியும்’’ என்றார் முதியவர். அங்கு இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவர் சொன்ன அற்புதத்தை நிகழ்த்தியும் காட்டினார்.
‘‘இதுவா... அற்புதம். மரக்கட்டையில் எதை வைத்தாலும் மிதக்குமே’’ என்று இளைஞர்கள் கூச்சலிட்டனர்.
‘‘மரக்கட்டையில் எதை வைத்தாலும் மிதக்கும். அது இல்லை என்றால் அனைத்தும் மூழ்கும். மரக்கட்டையை போல் நீங்களும் நல்லவர்களை பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்’’ என்றார் முதியவர். இதைக்கேட்ட இளைஞர்கள் மனம் திருந்தினர்.