காரமடை அரங்கநாதர் கோவிலில் பூணூல் போடும் வைபவம்
ADDED :1520 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் பூணூல் கோடும் ஆவணி அவிட்ட வைபவம் நடந்தது. கோவிலில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. காலசந்தி பூஜைக்கு பின், யஜுர் உபாகர்மா என்னும் பூணூல் போடும் வைபவம் தொடங்கியது. இதில் விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யாகவாசனம் முடிந்து, அரங்கநாத பெருமாளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா சங்கல்பம், காமோகார்ஷீத் ஜப சங்கல்பம் முடிந்தபின்பு, அர்ச்சகர்கள் பூணூல் அணிவித்து கொண்டனர். இதைத்தொடர்ந்து காண்டரிஷி தர்ப்பணம், பிரம்ம யஜ்ஞம், வேத ஆரம்பம், பூரணாகுதீ மற்றும் சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, அர்ச்சகர் வெங்கடேஷ் பிரசாத் நடத்தி வைத்தார்.