எமதர்மர் கோவில் பவுர்ணமி பூஜை
ADDED :1843 days ago
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே சென்னம்பாளையத்தில் உள்ள, எமதர்மர் கோவிலில், ஆவணி மாத பவுர்ணமி பூஜையும், சிறப்பு வழிபாடு நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள, இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கும், மூலவர் எமதர்மருக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சிறுமுகையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.