பழநியில் பூணூல் மாற்றும் வைபவம்
ADDED :1844 days ago
பழநி: பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சில சமூகத்தினர் பூணூல் மாற்றிக் கொண்டனர். தற்போது கோரானா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில்களில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் பூணூல் மாற்றும் வைபவத்தைக் கொண்டாடும் சமுதாயத்தினர் வீடுகளிலும், மடங்களிலும் பூணூல் மாற்றிக் கொண்டனர். அப்போது சமூக விலகல் உட்பட கோரணா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்தனர். பழநி அர்ச்சகர் ஸ்தானிக சங்கத்தின் சார்பில் தெற்கு ரத வீதியில் உள்ள பொது மடத்திலும், ஆயிரவைசிய சமுதாயதினர் சன்னதி வீதியில் உள்ள மடத்திலும், பழநி டவுன் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தின் சார்பில் அடிவாரம், சன்னதி வீதியில் விஸ்வா நிலையத்திலும், தெற்கு ரதவீத வாசவி மஹாலில் ஆரிய வைசிய சமஜத்தின் சார்பில் பூணூல் வைபவம் நடைபெற்றது.