கன்னிராஜபுரத்தில் திருக்கல்யாண உற்ஸவ விழா
ADDED :1525 days ago
கன்னிராஜபுரம்: சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பவுர்ணமி ஆவணி உற்ஸவ விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு காலையில் திருக்கல்யாணம் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக கவசம் அணிந்த நிலையில் பங்கேற்ற பக்தர்களின் மீது அட்சதை தூவப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.