உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் வருகை குறைவு

பழநியில் பக்தர்கள் வருகை குறைவு

பழநி: பழநியில் கொரேனா பரவலை தடுக்கும் விதமாக அரசு சமய வழிபாடுகளை வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. எனவே பழநி முருகன் கோயில் மற்றும் அதன் உப கோவில்களில் பக்தர்கள்.சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. வெளிமாவட்ட, வெளியூர் பக்தர்கள் பழநிக்கு வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் வருவது குறைந்துள்ளது. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டும் கிரி வீதி வலம் வந்து உப கோயில்கள், பாத விநாயகர் கோயில் முன்பு நின்று வணங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !