உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி, திங்கள் கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு அன்று மாலை 3.30 மணிக்கு உறியடி நிகழ்ச்சி, மாலை 4.45 மணிக்கு ராம் சாஸ்திரிகளின் கிருஷ்ண லீலை சிறப்புரை, மாலை 6.15 மணிக்கு ராமகிருஷ்ண தீபாராதனை நடைபெறுகிறது.தொடர்ந்து அன்று மாலை 7.45 மணிக்கு குழந்தைகளின் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று கிருஷ்ணரின் அருள்பெற வேண்டும் என தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !