/
கோயில்கள் செய்திகள் / 293 வது மதுரை ஆதீனமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்
293 வது மதுரை ஆதீனமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்
ADDED :1526 days ago
மதுரை: மதுரையில் 293 வது ஆதீனமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு தருமபுர ஆதினம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் பழமை வாய்ந்த மதுரை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த அருணகிரிநாதர் 13ம் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து மடத்தின் இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி இன்று (23ம் தேதி) பதவியேற்றார். சுவாமிகளுக்கு தருமபுர ஆதினம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.