பழநி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1848 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் நேற்று (ஆக.23) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 1,373 கிராம் தங்கமும், 15,ஆயிரத்து 319 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 மற்றும் 91 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், திருப்பூர் மாவட்டம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் உதவி ஆணையர் மேனகா. உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.