ராகவேந்திரரின் 350 வது ஆராதனை விழா: சிறப்பு அபிஷேகம்
ADDED :1535 days ago
காரைக்குடி: காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் 350 வது ஆராதனை விழா மற்றும் உலகளாவிய ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம் தொடக்க விழா நடந்தது. நேற்று பூர்வ ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடந்தது. தொடர்ந்து இன்று ராகவேந்திர சுவாமிக்கு மத்திய ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நாளை உத்திர ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குரு ராகவேந்திர சுவாமி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.