உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் 350வது ஆராதனை விழா: ரதோற்சவம்

ராகவேந்திரர் 350வது ஆராதனை விழா: ரதோற்சவம்

புதுச்சேரி : குருமாம்பட்டு ராகவேந்திரர் மடத்தில் 350வது ஆராதனை விழாவையொட்டி, இன்று ரதோற்சவம் நடக்கிறது.

புதுச்சேரி, குருமாம்பட்டில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், 350வது ஆரோதனை விழா கடந்த 22ம் தேதி தானிய பூஜையுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து, தினசரி காலை 5:00 மணிக்கு நிர்மால்ய விஜர்சனம், 8:30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம், 11:00 மணிக்கு கனகாபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அலங்காரம், ஹஸ்தோதகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இன்று காலை நிர்மால்ய விஜர்சனம், மகா சிறப்பு அபிஷேகம், கனகாபிஷேகத்தை தொடர்ந்து ரதோற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை ராகவேந்திரா சுவாமி மடம் மந்த்ராலயா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !