மகா சங்கடஹர சதுர்த்தி : பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1533 days ago
உடுமலை: மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை பிரசன்னவிநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசன்ன விநாயகர் கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. பவுர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு நடத்தப்படுகிறது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடக்கிறது. மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சுவாமிக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகரை வழிபட்டனர்.