புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED :1528 days ago
புவனகிரி : மகான் ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் 34 வது ஆண்டு ஆராதனை விழா நேற்று காலை பல்வேறு அபிேஷகங்களுடன் துவங்கியது.
காலை 9.00 மணிக்கு பூர்வ ஆராதனையுடன் விழா துவங்கியது. மந்தராலய மரபின் படி பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பகல் 1.00 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு செய்திருந்தனர். பூஜைகளை நரசிம்மாச்சாரியார் புதல்வர்கள், ரகு, ரமேஷ் ஆச்சாரியார் குழுவினர் செய்தனர். இன்று 25ம் தேதி பூர்வ ஆராதனை, நாளை 26 ம் தேதி உத்திர ஆராதனை நடக்கிறது.