உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலத்தில் விநாயகர் சிலைகள் சிறைபிடிப்பு

திருமங்கலத்தில் விநாயகர் சிலைகள் சிறைபிடிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் ராஜாராம் தெருவில் கடந்த சில வருடங்களாக விநாயகர் சதுர்த்திக்காக அரை அடி முதல் 7 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த வருடம் குரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட படாத நிலையில் சிலைகள் விற்பனை நடைபெறவில்லை. அப்பொழுது தயாரிக்கப்பட்ட சிலைகள் அந்த இடத்திலேயே வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் செப்டம்பர் 10 ல் விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில், பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 9 சிலைகளை போலீசார் எடுத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் பா.ஜ., மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் டி.எஸ்.பி., வினோதினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிலை செய்யும் இடத்தில் இருந்த மற்ற சிலைகளை போலீசார் அதே இடத்தில் வைத்து பாதுகாப்புக்கு போலீசை நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !