உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தொடரும் தடை; ராமநாதபுரம் கலெக்டர் தகவல்

கோயில்களில் தொடரும் தடை; ராமநாதபுரம் கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா கூறியுள்ளதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளது. கோயில், சர்ச், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடரும். விடுமுறை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்க அரசு விதித்த விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !