உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

துாத்துக்குடி, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இருப்பினும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 4.30 மணிக்கு கொடிபட்டம் வீதி சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்தது. திருவாவடுதுறை ஆதினம் உள்பட பலர் பங்கேற்றனர். செப் 7 வரை 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. கொரோனாவால் செப்.,5 வரை பக்தர்களுக்கு அனுசமதியில்லை. முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் திருவிழாவான தேரோட்டம் நடக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !