பகவத்கீதையின் பொருள்
ADDED :1612 days ago
பகவத்கீதையை பகவத் கீதை என்று பிரிப்பர். பகவத் என்றால் கடவுள். கீதை என்பது கீதம். ஆம்..இதற்கு கடவுளின் பாட்டு எனப் பொருள். அர்ஜூனனுக்கு குரு÷க்ஷத்ர களத்தில், தர்மம் தவறி நடந்த தன் உறவினர்களை பாசம் காரணமாகக் கொல்லத் தயங்கிய நேரத்தில், பகவான் கிருஷ்ணர் இனிமையாக இசைத்த ஸ்லோகங்களே பகவத்கீதை. குரு÷க்ஷத்திர களத்தில் அர்ஜுனன் பாசம் என்ற சிக்கலில் விழுந்து தவித்தது போல, இன்று வரை ஒவ்வொரு மனிதனும் மனைவி, குழந்தை, தாய், தந்தை, அக்கா, தம்பி, அண்ணன், நண்பன்...இன்னும் எத்தனையோ உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களையும் அந்த பந்தத்தில் இருந்து விடுவித்து, தாமரை இலை தண்ணீர் போல வாழ வைக்க உதவும் கருத்துக்களைத் தருவது கீதை. இதன் மூலம் மனிதன் துன்பம் நீங்கி இறைவன் மட்டுமே உண்மை என்று உணருகிறான்.