உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அன்னூர் பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர, கரிவரத ராஜப் பெருமாளுக்கு, காலை 10:30 மணிக்கு, அபிஷேக பூஜையும், மதியம் 12:30 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. பெருமாளுக்கு, வெண்ணை மற்றும் சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. பளஞ்சிக குழு சார்பில், பஜனை நடந்தது. தாச பளஞ்சிக சேவா சங்கம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடம் அணிந்த சிறுவர்-சிறுமியர் பஜனை பாடல்களுக்கு நடனமாடினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !