ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 3 நாட்களுக்கு பின் திறப்பு
ADDED :1536 days ago
ராமேஸ்வரம்: 3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் அக்னி கடலில் நீராடி, தரிசனம் செய்தனர்.கொரோனா பரவலால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது. ராமேஸ்வரம் கோயிலில் 3 நாட்களுக்கு பின் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதித்ததால், தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி முன் முகக்கவசம் அணிந்தபடி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் மூடி கிடப்பதால், அதனை திறக்க கோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.