உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி  பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

பெரியாண்டிக்குழி  பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று மாலை 6.00 மணிக்கு பால், தயிர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் திருத்தேரில் வைத்து, கோவிலை சுற்றி வலம் வந்தது. இரவு 10.00 மணிக்கு சுவாமியை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுபாடி ஊஞ்சல் உற்சவம் நடந்து. சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !