உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்

சூலூர்: சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில், கணபதி ஹோமத்துடன் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் வைக்கப்பட்டு, உற்சவ விழா நடந்தது. ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !