கீழக்கரை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
கீழக்கரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கீழக்கரை கோகுலம் நகரில் பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணன் கோயிலில் விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜையும், கோபியர் வேடம் அணிந்த பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ராதாகிருஷ்ணன், தலைவர் மாடசாமி, பொருளாளர் அழகர்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
* காஞ்சிரங்குடி பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் காலை 7 மணி அளவில் 108 பால்குட ஊர்வலமும், அபிஷேக ஆராதனைகளும் வெள்ளிக் கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. கோயிலின் முன்புறம் பொதுமக்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
*கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயண சுவாமி கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
*உத்தரகோசமங்கை அருகே வேளானூரில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது.
* சாயல்குடி பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். சாயல்குடி அருகே குருவாடியில் கண்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.