கோவில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கல்
ADDED :1598 days ago
புதுச்சேரி: கோவில் ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில், காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா நெருக்கடி கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.சங்கத் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை கவர்னர் பழனியப்பன் முன்னிலை வகித்தார்.முன்னாள் கவுன்சிலர் குமரன், நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் சக்கரபாணி, சந்திரசேகரன், உதயகுமார், வழக்கறிஞர்கள் தினேஷ்குமார், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.