திருக்குறுங்குடி அழகிய நம்பிகோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :1636 days ago
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று உறியடி திருவிழா நடந்தது. அழகிய நம்பிராயர் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று, கொண்டாடப்பட்டது. காலையில் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம், அபிஷேகம், தீபாராதனை கோஷ்டி நடந்தது. மாலையில் கோயில் முன்பு உறியடி உற்சவம் நடந்தது. தொடர்ந்து கிருஷ்ணர், பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜீயர் முன்னிலையில் கிருஷ்ணருக்கு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஜீயர் மடம் வர் ஏஜன்ட் சிவசங்கரன் தலைமையில் அர்ச்சகர்கள் ய்திருந்தனர்.