கந்தசுவாமி கோவிலில் முகூர்த்த நாளில் கூட்டம்
ADDED :1521 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆவணி முகூர்த்த நாளான நேற்று, பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்தல் போன்ற நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.அதேபோல், கோவில் கிழக்கு புற, 16 கால் மண்டபத்தில் திருமணங்கள் நடந்தன. திருப்போரூர் மற்றும் மற்ற ஊர்களில் திருமணம் முடித்தோரும், கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.