உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் வசூல்

மேல்மலையனுார் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் வசூல்

அவலுார்பேட்டை, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 31 லட்சத்து 2 ஆயிரத்து 872 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட்டனர்.உண்டியலில் பக்தர்கள் செலுத்திய 31 லட்சத்து 2 ஆயிரத்து 872 ரூபாயும், தங்க நகைகள் 290 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 610 கிராம் இருந்தன.ஆய்வாளர்கள் அன்பழகன், தினேஷ், செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !