திண்டுக்கல்லில் கோவில் முன் பக்தர்கள் வழிபாடு
ADDED :1528 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் கோயில், லிங்கேஸ்வரா கோயில், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயில், பழநி பெரியாவுடையார் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில் உட்பட பலகோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்தி சிலைக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. திரளான பக்தர்கள் கோவில் முன்பாக நெய் விளக்கேற்றி சாமியை வணங்கி சென்றனர்.