வாழ்வு சிறக்க...
ADDED :1602 days ago
ஒருமுறை தொழுகை நடக்கும் கூட்டத்திற்கு முல்லா சென்றார். அப்போது ஒருவன் தன் அருகில் இருந்தவரிடம்,
‘‘வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேனே’’ என்றார்.
‘‘தொழுகை நேரத்தில் பேசி என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாயே’’ என இரண்டாவது நபர் கோபம் கொண்டார்.
‘‘நீயுந்தான் என்னுடன் பேசினாய். அதனால் என் பிரார்த்தனையும் கலைந்து விட்டது’’ என்றார் முதலாவது நபர்.
இதை கேட்ட முல்லா சிரித்தார்.
‘‘ஏன் சிரிக்கிறீர்’’ என இருவரும் கேட்டனர்.
‘‘மனிதனின் இயல்பை நினைத்து சிரித்தேன். பிரார்த்தனை செய்யும்போது மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. கவனம் முழுவதும் பிரார்த்தனையில்தான் இருக்க வேண்டும். இதுபோல் பிறருக்கு தொந்தரவு தராமல் இருந்தாலே போதும் நமது வாழ்வு சிறக்கும்’’ என்றார்.
இருவரும் வெட்கத்தால் தலைகுனிந்தனர்.