யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் சுவாமி வலம்
ADDED :1527 days ago
புதுச்சேரி : புதுச்சேரி குருமாம்பட்டு ஹவுசிங் போர்டு இந்திரா நகரில் உள்ள யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அமாவாசையையொட்டி சுவாமி உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.