உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
ADDED :1525 days ago
திருநெல்வேலி: மணிமூர்த்தீஸ்வரம், உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்களை கோயிலில் அனுமதிக்காமல் நேற்று கொடியேற்று விழா நடந்தது. சுவாமி, அம்பாள், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் ந்தன. 10 நாட்கள் விழா நடக்கிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தி நாளில் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது.