சுந்தரவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1523 days ago
கடலாடி: கடலாடி அருகே ஒருவானேந்தல் குருவிகாத்தி கிராமத்தில் சுந்தர விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த செப்.,6 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், உள்ளிட்ட யாகசாலை வேள்வி நடந்தது. கடம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு காலை 10 மணி அளவில் கொடுமலூர் குருக்கள் தங்கராஜ் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.