பக்தர்கள் பயன்பாட்டிற்கு பழநி ரோப்கார் சேவை துவக்கம்
பழநி:பழநியில் பராமரிப்பு பணிகள் முடிந்து ரோப் கார் சேவை மீண்டும் துவக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலுக்கு செல்ல வின்ச், படிப்பாதை, ரோப்கார் சேவைகள் உள்ளன. இதில் வின்ச், படிப்பாதை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்திருந்தது. ஆகவே ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பின் வருடாந்திர பராமரிப்பு பணியாக ரோப் கார் இயந்திரம், ரோப், சாப்ட் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.சில மாதங்களாக ரோப் கார் இயக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய ரோப், ரூ. 6 லட்சம் மதிப்பிலான சாப்ட் மாற்றப்பட்டு, கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது. நேற்று முதல் ரோப் கார் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தொழில் நுட்ப காரணங்களால் தற்போது புதிய பெட்டிகள் இணைக்கப்படாமல் பழைய பெட்டிகளே பயன்பாட்டில் உள்ளது. முன்னதாக இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.