சங்ககிரி மலைக்கு ரோப்கார்: எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED :1520 days ago
சங்ககிரி: அ.தி.மு.க.,வின், சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், சட்டப்பேரவையில் பேசியது குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கை: சங்ககிரி மலைக்கோட்டையில், ரோப்கார் வசதி ஏற்படுத்தி கொடுத்து, சுற்றுலா தலமாக தரம் உயர்த்த வேண்டும். இரும்பாலை வளாகத்தில் உள்ள, 500 ஏக்கரில், மத்திய அரசின் ஆய்வில் உள்ள ஜவுளி பூங்காவை நிறைவேற்றித்தர வேண்டும். சங்ககிரியில் ஆட்டோ தொழிற்பேட்டை நகர் அமைத்து, மானிய விலையில் உதிரி பாகங்கள், புது தொழில்நுட்ப கூடங்களை ஏற்படுத்தி, நசிந்து வரும் லாரி தொழிலை காப்பாற்ற வேண்டும். இடங்கணசாலை, தாரமங்கலம் பேரூராட்சி தரம் உயர்த்தப்படுவதை போன்று, சங்ககிரி பேரூராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.