புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1523 days ago
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மாஸ்க் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.