உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை

விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை

சூலூர்: சூலூர் வட்டார விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் வட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் அதிகாலை முதல் நடந்தன. சின்னியம்பாளையம் சித்தி விநாயகர் கோவில், கருமத்தம்பட்டி புதூர் சித்தி விநாயகர் கோவில், நீலம்பூர் விநாயகர் கோவில், வரப்பிள்ளையார் கோவில், அரசூர், கணியூர், சோமனூர் செல்வ விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் விநாயகப்பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். அனைத்து கோவில்களிலும் ஏராளாமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !