உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே கழனிக்குடி முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்பு யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !