விபத்தில் பலியான மகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய தந்தை
ADDED :1526 days ago
ராமநாதபுரம் : விபத்தில் பலியான மகனுக்கு, தந்தை கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், 55. சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் சக்திவேல், 22, விபத்தில் பலியானார். மனமுடைந்த மீனாட்சி சுந்தரம், மகன் நினைவாகவே இருந்தார்.மகனின் நினைவைப் போற்றும் வகையில், கோவில் கட்டி கருவறையில் மகன் உருவத்தை வெண்கலச் சிலையாக அமைத்துள்ளார். அதற்கு, சக்திவேல் ஆத்மலிங்க திருக்கோவில் எனவும் பெயரிட்டுள்ளார். நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடத்தி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.