சுயம்புலிங்க சுவாமி கோயிலில் பொங்கல் விழா
ADDED :1529 days ago
சாயல்குடி: சாயல்குடி சுயம்புலிங்க நகரில் உள்ள சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. மாலையில் 108 விளக்கு பூஜையும், முன்னதாக மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களின் பால்குடம் ஊர்வலம், அன்னதானம் நடந்தது. பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர். கோயில் முன்பு பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை பூவன்நாடார் வகையறா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.