நீலமங்கலத்தில் அத்தி விநாயகர் வீதியுலா
ADDED :1593 days ago
கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் அத்தி விநாயகர் வீதியுலா உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் வென்னியம்மன் பவனத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து உற்சவர் சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன், வீதியுலா நடந்தது.