உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனாதையாக கிடந்த கருங்கல் ஸ்வாமி சிலை!

அனாதையாக கிடந்த கருங்கல் ஸ்வாமி சிலை!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையோரம் மூன்று கருங்கல் சாமிசிலைகள் வீசப்பட்டு கிடந்தது.கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலை செல்லியம்மன்கோவில் பின்புறம் நேற்று அதிகாலை மூன்று கருங்கல்லால் ஆன சாமி சிலைகள் கிடந்தது. ஆறடி உயரமுள்ள பெருமாள் சிலை ஒன்றும், நான்கடி உயரமுள்ள அம்மன் சிலைகள் இரண்டும் கிடந்தது.இதுபற்றி தகவலறிந்ததும் சீனிவாசநல்லூர் வி.ஏ.ஓ., தாளமுத்து, ஆர்.ஐ., சிங்காரவேல், தாசில்தார் துரைராஜ் ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாமி சிலைகளை கைப்பற்றினர். பின் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சமீபத்தில் நாச்சியார்கோவில் போலீஸ் சரகம் நெடார் கிராமத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலிலிருந்து மூன்று கருங்கல் சிலைகள் திருட்டு போய்விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தது. இந்த சிலைகள் தான் அவை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.கும்பகோணம் தாசில்தார் துரைராஜ் ஆறடி உயரமுள்ள வரதராஜபெருமாள் சிலையும், நான்கு அடி உயரமுள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி சிலைகளையும் நாச்சியார்கோவில் போலீஸில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !